இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி சென்ற வியாழக்கிழமை நாட்டின் சுகாதார நன்மைக்காக 'கிரீன்பாஸ்' திட்டத்தின் விரிவாக்கத்தை அறிவித்தார்.
உணவகங்கள், ஜிம்கள் மற்றும் சினிமாக்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நுழைவதற்கு சுகாதார பாஸ்போர்ட் தேவைப்படும் என இத்திட்டச் செயல்முறையினை அறிவித்ததையடுத்து சனிக்கிழமை இத்தாலியைச் சுற்றி போராட்டங்கள் நடத்தப்பட்டன.ஏற்பாடு செய்யப்பட்டன.
"அடிமைகளைப் போல வாழ்வதை விட சுதந்திரமாக இறப்பது நல்லது!" , “தடுப்பூசிகள் உங்களை விடுவிக்கின்றன” எனும் சுலோக அட்டைகளைத் தாங்கிய பெருமளவில் முகமூடி அணியாத எதிர்ப்பாளர்கள் இத்தாலியின் தலைநகர் ரோம், வர்த்தக நகர் மிலான் உட்பட பல்வேறு நகரங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்ப ட்டனர்.
இதேவேளை பிரதமரின் அறிவிப்பினைத் தொடர்ந்து, தடுப்பூசிக்கான முன்பதிவு இணையதளங்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நியமனங்களுக்கான கோரிக்கையை சமாளிக்க சிரமப்படும் அளவில் முன்பதிவுகள் செய்யப்பட்டன.
இத்தாலியின் கொரோனா வைரஸ் அவசர ஆணையர் கூற்றுப்படி, டிராகியின் தொலைக்காட்சி அறிவிப்பைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் குறைந்தது அரை மில்லியன் தடுப்பூசி முன்பதிவுகள் செய்யப்பட்டன.
தடுப்பூசி போடுவதைத் தவிர்க்க மற்றவர்களை ஊக்குவிக்கும் அனைவரையும், பிரதமர் ட்ராகி வலுவான வார்த்தைகளால் கண்டித்தார். "தடுப்பூசி போடக்கூடாது என்பதற்கான அழைப்பு இறப்பதற்கான அழைப்பு, அல்லது மற்றவர்கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்பதான கோரிக்கை" என இறுக்கமாகத் தெரிவித்தார்.
எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நடந்த போதும், பெருமளவிலான மக்கள் தடுப்பூசித் திட்டத்தில் இணைந்து வருவதாகவும், நேற்று மட்டும் சுமார் 49,000 குடிமக்கள் கையெழுத்திட்டனர். இந்த புதிய கோரிக்கைகளின் அடிப்படையில் இன்று முதல் ஆகஸ்ட் இறுதி வரை 100,000 புதிய பதிவுகள் வரலாம் ” என லோம்பார்டி பிராந்தியத்தின் துணைத் தலைவர் லெடிசியா மொராட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.