சுவிற்சர்லாந்தில் மத்திய பகுதியில் நேற்று பெய்த கன மழை பாரிய சேதங்களை உண்டு பண்ணியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கன மழை பெய்ததன் காரணமாக, சில நிமிடங்களில் தெருக்களில் நீர் நிரம்பி ஆறுகளாக மாறியதாகவும், வீடுகளின் அடித்தளங்களில் வெள்ளம் புகுந்து கொண்டதாகவும் அறிய வருகிறது. சதுர மீட்டருக்கு சுமார் 32 லிட்டர் வரை மழை பெய்ததாகவும், இதனால் 10 முதல் 20 சென்டிமீட்டர் வரையிலானஉயரத்தில் நிலத்தில் நீர் தேங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட கன மழை பல சாலைகள் மூடப்படுவதற்கு காரணமாகவும் அமைந்தது. அதி கூடிய வெள்ளத்தில் சில கார்கள் இழுத்துச் செல்லப்பட்டதாகவும், பல இடங்களில் பனிக்கட்டி மழை பொழிந்ததாகவும் தெரியவருகிறது.