சுவிற்சர்லாந்தில் கோவிட் வைரஸின் புதிய மாதிரியான ஒமிக்ரான் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, கோவிட் பெருந்தொற்றுத் தொடர்பான பாதுகாப்பு விதிகளை மீளவும், இறுக்கமாக்க அரசு ஆலோசித்து வருகிறது.
இதன்படி, குடம்ப உறுப்பினர்கள் சந்திப்பாயினும், 10 பேருக்கு மேல் இருப்பின் கட்டாய சான்றிதழ் தேவைப்படும். அதேபோல் தனியார் துறையிலும் கோவிட் பாஸ் கட்டாயமாகும். தவிர வீட்டிற்குள் முகமூடி, மற்றும் விரைவான சோதனைகளின் வலுக்காலம் 24 மணிநேரம் மட்டுமே எனவும், PCR சோதனைகளுக்கான காலம் 48 மணிநேரமாகவும் குறைக்கப்படவுள்ளன.
இது தொடர்பான யலந்தாலோசிப்புக்கள் இன்று மாலை வரை நீடிக்கிறது. இதன் பின் எட்டப்படும் தீர்மானங்கள், வரும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரும் எனவும், ஜனவரி 24ந் திகதி வரையில் இது நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் புதியதும், ஆபத்து நிறைந்ததுமாக கருதப்படும் ஒமிக்ரான் தொற்றுக்கள் இரண்டு, சுவிற்சர்லாந்தில் உறுதிசெய்யப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.