உண்மையான பால்ய நட்பை விட இனிமையானது ஏதும் உண்டா?
உடல் இயக்கத்தை பாதிக்கும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ரூபி எனும் சிறுமிக்கு அபி எனும் நண்பியின் ஒப்பில்லா அன்பு; அவளை கையோடு பூமியையும் சுமக்கவைக்கும்.
2018 ஆம் ஆண்டு வைரலான ஒரு மனதைக் கவரும் வீடியோவில், அப்போதைய 3 வயது ரூபி ஹாஃப்மேனுக்கும் அவரது உற்ற நண்பர் அபியுடனான தூய்மையான நட்பும்; ஊக்கமும் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
முச்சக்கரவண்டிகளுக்காக கட்டப்பட்ட டிரைவ்வே ரேஸ் டிராக்கில், குழந்தைகளுக்கு ஏற்ற மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியான மின்சார கார் ஒன்றில் இருக்கும் ரூபியை அவளது கைகளை தூக்கிபிடித்து வைத்து அதனை ஓட்டச்செய்கிறாள் அப்பி.
2018 இலிருந்து ரூபியின் ஒவ்வொரு முக்கிய தருணங்களையும் அவரது குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். அதில் முக்கியமாக இடம்பெறுவது ரூபியும் அப்பியும் அவர்களது நட்பும்தான்.