தென்னிந்திய பாரம்பரிய சமையலில் மிக முக்கிய தொடு கறியாக பயன்படும் ஒரு மருத்துவ உணவு வகையாகும்.
தாவரவியல் பெயர்-Mentha arvensis
குடும்ப பெயர்- Lamiaceae
ஆங்கிலப் பெயர்-
Corn mint, Marsh mint
சிங்கள பெயர்- Odutalan
சமஸ்கிருத பெயர்- Pudina
வேறு பெயர்கள்-
ஈயெச்சக்கீரை, பொதீனா, புதியன் மூலி
பயன்படும் பகுதி-
சமூலம்
சுவை- கார்ப்பு, துவர்ப்பு
வீரியம்- சீதம், வெப்பம்
விபாகம்- கார்ப்பு
வேதியியல் சத்துக்கள்-
Menthol
Menthone
Alpha & beta-pinene
Alpha-thujene
Limonene
Beta_phellandrene
Furfural
Methylcyclohexanone
Camphene
மருத்துவ செய்கைகள்-
Antibacterial - பற்றீரியா எதிரி
Antifungal- பங்கசு கொல்லி
Antispasmodic-இசிவகற்றி
Astringent- துவர்ப்பி
Carminative-அகட்டு வாய்வு அகற்றி
Cholagogue- பித்தநீர் பெருக்கி
Diuretic- சிறுநீர் பெருக்கி
Expectorant- கோழையகற்றி
Refrigerant- குளிர்ச்சி உண்டாக்கி
Stimulant- வெப்பம் உண்டாக்கி
Stomachic-பசியைத் தூண்டி
தீரும் நோய்கள்-
உணவில் விருப்பமின்மை
உணவு செரிக்காமை ரத்த தாது பலவீனம் மலப்போக்கு
வாந்தி
சுரம்
காமாலை
விக்கல்
வயிற்று வலி
தலைவலி
பயன்படுத்தும் முறைகள்-
இதன் சமூலத்தை உலர்த்தி கஷாயம் இட்டு 40ml முதல் 80ml வீதம் கொடுக்கலாம். மேலும் காமாலை, விக்கல் முதலிய நோய்களும் சாந்தப்படும். வயிற்று வலி முதலிய நோய்களையும் போக்கும்.
இதன் சமூலத்தையும் கற்பூரப்புல்லையும் சம எடை எடுத்து முறைப்படி கஷாயம் இட்டு கொடுக்க தலைவலி, வாந்தி, உணவில் விருப்பமின்மை முதலியவை நீங்கும். சுரம் தணியும்; சிறுநீரை விருத்தியாக்கும்; நல்ல நித்திரையை தரும்.
மாதாந்தர ருது காலத்தில் மேற்படி கசாயத்தை கொடுக்க சூட்டைப் போக்கி அதனால் ஏற்பட்ட வயிற்று வலியையும் போக்கும்.
இதன் சமூலத்தை நன்றாய் உலர்த்தி பொடித்து அரித்து பல் துலக்கி வரலாம்.
இதன் இலையை துவையல் செய்து உணவோடு அருந்திவர உணவில் விருப்பமின்மை, உணவு செரிக்காமை முதலியவைகளைப் போக்கி பசியை உண்டுபண்ணும்.
இப் பூண்டில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கிறார்கள்- அதனை தலைக்கு தடவலாம்.
உள்ளுக்கு சிறிது நீரில் கலந்து கொடுக்க வயிற்றுவலி நீங்கி பசியை உண்டு பண்ணும்.
இலைச்சாற்றை விஷ பூச்சி கடிகளுக்கு தடவலாம்.
~சூர்யநிலா