மத்தியாசியாவை தாயகமாக கொண்ட பூண்டானது இலங்கையில் மலைநாடுகளிலும் இந்தியாவின் பல இடங்களிலும் பயிரிடப்படுகின்றது.
தாவரவியல் பெயர்- Allium sativum
குடும்பப் பெயர்- Amaryllidaceae
ஆங்கிலப் பெயர்- Garlic
சிங்களப் பெயர்-சுது_லுணு
சமஸ்கிருதப் பெயர்-அரிஷ்தா,லஷுனா
வேறு பெயர்கள்- உள்ளிப் பூண்டு, வெள்ளை வெங்காயம்
பயன்படும் பகுதி- குமிழ்(Bulb)
சுவை-கார்ப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு
வேதியியற் சத்துகள்-
Allicin
Ajoene
Diallyltetra ,penta, hexa and heptasulphides volatile oil
Inulin
Choline
Myrosinase
Allyl propyl-disulphide
மருத்துவச் செய்கைகள்
Antibiotic- நுண்ணுயிர்க்கொல்லி
Anticarcinogenic- புற்றுநோய் எதிரி
Antithrombic- குருதியுறைதல் எதிரி
Anthelmintic- புழுக்கொல்லி
Brain tonic- மூளை உரமாக்கி
Carminative- அகட்டுவாய்வகற்றி
Diaphoretic- வியர்வை பெருக்கி
Diuretic- சிறுநீர் பெருக்கி
Expectorant- கோழையகற்றி
Fungicide- பங்கசு கொல்லி
Hypocholesterolaemic- குருதி கொலஸ்ட்ரோல் அளவை குறைக்கும்
Hypoglycemic- குருதி குளுக்கோஸ் அளவை குறைக்கும்
Hypotensive- குருதியமுக்கத்தை குறைக்கும்
Stimulant- வெப்பமுண்டாக்கி
நோய்நிலைமைகள்-
சுவாசத் தொற்றுகள், , சிறிய கட்டிகள், செவிடு, நாட்பட்ட இருமல், இரைப்பு, வாய்நோய், வளிநோய்கள், வயிற்றுப் புழு, ஐயத்தலைவலி, முப்பிணி ,மூலநோய் , நீரேற்றம், சீதக்கழிச்சல்
பயன்படுத்தும் முறைகள்-
வெள்ளைப்பூண்டு, மிளகு, கரிசாலை இம் மூன்றும் ஒரு நிறையாய் சேர்த்தரைத்து சாப்பிட வயிற்றுப்பிசம் முதலியன நீங்கும்.
வெள்ளைப் பூண்டை அரைத்து சிறிய கட்டிகளுக்குப் போட அவை கரையும்.
இதன் சாற்றை காதில் 1,2 துளி பிழிய செவிடு நீங்கும்.
உள்நாக்கு இருமலுக்கு உள்நாக்கில் படும்படி தொட்டால் குணமாகும்.
20-30 துளி வீதம் தினம் 2-3 முறை கொள்ள இருமல், இரைப்பு, வயிற்றுப் புழு இவைகள் தீரும்.
இதனை பாலில் வேகவைத்து கொடுக்க பாலினால் உண்டாகும் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
கடுகு அல்லது தேங்காய் எண்ணெயுடன் பூண்டு சேர்த்து எண்ணெயாக காய்த்து பூசி ஒற்றடமிட இரைப்பு நோய், குடைச்சல், உடல் நோதல் முதலிய வாதநோய்கள் அகலும். இதனை காதில் விட காது இரைதல், குத்தல் நீங்கும்; புழுக்கள் இருப்பினும் சாகும்.
நல்லெண்ணெயில் பூண்டை இட்டு காய்ச்சி காது நோய்க்கு விடலாம்.
பூண்டை உப்பிட்டுக் கசக்கி சாறெடுத்து தடவ சுளுக்கு மேற்றோல் சரிவு குணமாகும்.
உள்ளியை வேகவைத்து நெய், சர்க்கரை கூட்டி பிசைந்து உண்ண சீதக்கழிச்சல் போகும். இதன் சாற்றை புரையோடும் புண்களுக்குப் போட அவை ஆறும்.
பருப்பு சமைக்கும் போது பூண்டினை தட்டிப் போடுவதால் வயிற்றுப் பொருமல், வாய்வுத் தொல்லைகள் ஒழியும்.
பூண்டு, வெங்காயம் இரண்டும் உடம்பில் ஓமோன் சுரப்பிகளை சீராக்கும்.
ரஷ்யாவின் பென்சிலின் என்ற சிறப்புப் பெயரைக் கொண்ட வெள்ளைப் பூண்டினை உணவில் தவிர்க்காது அன்றாடம் உபயோகித்து ஆரோக்கியம் பெறுவோம்.
~சூர்யநிலா