Nature medicine என்ற மருத்துவ நாளிதழில் ஜூலை 1 ஆம் திகதி வெளியான தகவல் படி முழங்காலுக்கு கீழே கால் துண்டிக்கப் பட்ட 7 பேருக்கு வெற்றிகரமாக மூளையால் முழுமையாகக் கட்டுப் படுத்தக் கூடிய செயற்கை ரோபோட்டிக் கால் பொருத்தப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பயோனிக் கால்கள் புதிய ஓ பேடிக் செயற்கை தொழிநுட்பத்தால் இயங்கும் செயற்கை உறுப்புகள் எனப்படுகிறது. மனிதத் தசைகள் மற்றும் குறிப்பிட்ட நரம்புகளின் சிக்னல்களை உள்வாங்கி செயற்படும் விதத்தில் AMI தொழிநுட்பத்துடன் இணைக்கப் பட்ட இந்த கால்களின் நடை வேகம் 41% விதமாக அதிகரித்துள்ளது.
மேலும் அப்படியே கால்கள் உள்ளவர்களுக்கான சமமான செயல் திறனையும் கொடுத்துள்ளது. படிக்கட்டுகளில் ஏறி இறங்குதல் மற்றும் சாய்வான பாதைகளில் பயணித்தல் என்பன மிக இயல்பாக மூளையால் கட்டுப் படுத்த படுகிறது. எனினும் முழங்காக்கு மேல் துண்டிக்கப் பட்டவர்கள் மற்றும் ஊனமாகவே பிறந்தவர்களுக்கும் இது உதவுமா என்ற கேள்வியையும் ETH Zurich பல்கலைகழக பேராசிரியர் ஸ்டானிஸா ராஸ்போவிச் எழுப்பியுள்ளார்.
இக்கண்டுபிடிப்பில் பங்கேற்ற MIT பேராசிரியர் ஹக் ஹேர் தனது 17 வயதில் மலையேற்றத்தின் போது பனிப்புயலில் சிக்கி உறை பனியால் முழங்காலுக்கு கீழே தனது 2 கால்களையும் இழந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
தகவல் - The Economist