free website hit counter

மூலிகை அறிவோம் கருவா

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

இலங்கை மற்றும் இந்தியாவில் பயிராகின்றது. உலகின் வேறு பகுதிகளில் விளைகிற கருவாப்பட்டையை விட இலங்கையில் விளைவது உயர்வானது.

தாவரவியல் பெயர்- Cinnamomum zeylanicum
குடும்பப் பெயர்- Lauraceae
ஆங்கிலப் பெயர்- Cinnamon
சிங்களப் பெயர்- குருந்து
*சமஸ்கிருதப் பெயர்- சோசா, சோலா, தாருசிடா
வேறு பெயர்கள்- இலவங்கப்பட்டை

பயன்படும் பகுதி- பட்டை,இலை

சுவை- காரம், இனிப்பு
வீரியம்- சீதம்
விபாகம்- இனிப்பு

வேதியியற் சத்துக்கள்-
Cinnamaldehyde
Eugenol
Camphor
Tannins
Diterpenes
Cinnzeylanin
Cinnzeylanol

மருத்துவச் செய்கைகள்-
Antibiotic-நுண்ணுயிர்க்கொல்லி
Antiseptic - அழுகலகற்றி
Antispasmodic- இசிவகற்றி Aphrodisiac- இன்பம்பெருக்கி
Astringent -துவர்ப்பி
Carminative-அகட்டுவாய்வகற்றி
Expectorant-கோழையகற்றி
Stimulant- வெப்பமுண்டாக்கி

தீரும் நோய்கள்-
தாது நஷ்டம்
பாம்பு விஷம்
சகல விஷம்
சிலந்தி விஷம்
இருமல்
இரைப்பு
இரத்தக்கடுப்பு
வயிற்றுக்கடுப்பு
பேதி
உள்மூலப்புண்
பெரும்பாடு
மந்தப்பிரசவ வேதனை
வாந்தி
வாய்ப்புண்
வாய்துர்நாற்றம்

பயன்படுத்தும் முறைகள்-
கறிமசாலாவில் சேரும் ஒரு முக்கிய சரக்கு.

மேற்கண்ட பிணிகளுக்கு இப்பட்டையின் தூளை 325mg- 1300mg வரை கொடுக்கலாம்.
சீதபேதிக்கு 1300mg எடுக்க சிறந்த பலனைத்தரும்.கருவாப்பட்டை, ஏலம்,சுக்கு இவைகளின் சூரணம் சமனெடை எடுத்து 200mg-650mg வரை கொடுக்க வாந்தி, வயிற்றுப்பொருமல், இரத்தக்கடுப்பு, பேதி குணமாகும்.

கருவாப்பட்டை, சோம்பு, சுக்கு, வாய்விடங்கம், கிராம்பு வகைக்கு 4 g ஆகச் சேர்த்து முறைப்படி குடிநீரிட்டு 17g -35g வரையிலும் தினமிருவேளை கொடுத்து வர வயிற்றுவலி, குன்மம், கிருமிக்கடி முதலிய நோய்கள் தீரும்.
கருவாப்பட்டை 1 பங்கு , காசுக்கட்டி 3 பங்கு இவைகளை கொதிக்கிற நீர் 80 பங்கில் நன்றாய்க் கலக்கி வடிகட்டி 17g வீதம் தினம் 3 வேளை கொடுக்க பேதி தீரும்.
இது வாய் துர்நாற்றத்தை போக்குவதுடன் தேகத்திற்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது.
இலவங்கத்தின் பட்டை மற்றும் இலையிலிருந்து தைலம் தயாரிக்கப்பட்டு இலேகியங்களிலும் சூரணங்களிலும் சேர்க்கப்படுகின்றது.

~சூர்யநிலா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula