இலங்கையிலும் இந்தியாவிலும் பயிராகிறது.நறு மணம் மற்றும் அதன் தைலப்பசை காரணமாக கறிமசாலாவிலும் வணிக உற்பத்திப் பொருட்களில் மிக முக்கிய சரக்காகவும் சேர்கின்றது.(உ-ம்_ பற்பசை, சவர்க்காரம்)
தாவரவியல் பெயர்- Eugenia caryophyllata
குடும்பப் பெயர்- Myrtaceae
ஆங்கிலப் பெயர்- Cloves
சிங்களப் பெயர்- கராபு, கராபு-நெடி
சமஸ்கிருதப் பெயர்- லவங்கம்
வேறு பெயர்கள்- அஞ்சுகம், கிராம்பு, வராங்கம், சோசம், திரளி
பயன்படும் பகுதி- மொட்டு
சுவை- காரம், விறுவிறுப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு
வேதியியற் சத்துக்கள்-
Volatile oil
Caryophyllin
Eugenin
Tannic acid
Salicylic acid
மருத்துவச் செய்கைகள்-
Anaesthetic - துயரடக்கி
Antiseptic-அழுகலகற்றி
Antispasmodic- இசிவகற்றி
Carminative- அகட்டுவாய்வகற்றி
Nutritive- போசனாகாரி
Rubefacient- தடிப்புண்டிக்கி
Stimulant- வெப்பமுண்டாக்கி
Stomachic- பசித்தீ தூண்டி
தீரும் நோய்கள்-
பல்வலி
பசியின்மை
பித்தமயக்கம்
அயர்ச்சி
அஜீரணம்
வாந்தி பேதி
விக்கல்
சுக்கிலநஷ்டம்
இரத்தக்கடுப்பு
செவிநோய்
சிவந்த மச்சம்
கறுத்த மச்சம்
வாத நோய்கள்
கண்ணில் படரும் பூ
பயன்படுத்தும் முறைகள்-
கிராம்பை நீர்விட்டு மை போலரைத்து நெற்றியிலும் மூக்குத்தண்டிலும் பற்றிட தலைபாரம், நீரேற்றம் குணமாகும்.
கிராம்பை பொடியாக்கி வெந்நீரில் அல்லது பன்னீரில் கலந்து முகத்தில் பூசி வர முகத்திலுண்டாகும் சிறு சிறு கரும்புள்ளிகள் நீங்கும்.
தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப் புண் ஆறும்; பல்லீறு கெட்டியாகும்.
300 ml வெந்நீரில் கிராம்புத் தூள் 10 கிராம் சேர்த்து அரைமணி நேரம் வரை மூடி வைத்து வடிகட்டி 15 -70 ml வீதம் உட்கொள்ள மந்தம், கருப்பிணிகளின் வாந்தி, இரத்தக்கடுப்பு, பேதி நீங்கும்.
கிராம்பு, சிறுநாகம் பூ, விலாமிச்சம் வேர், திரிகடுகு இவைகளின் சூரணம் சம அளவெடுத்து வடகஞ் செய்து கொடுக்க பித்தமயக்கம், வாந்தி, பேதி, மூலம் வெளித்தள்ளல் என்பன தீரும். (65-130mg)
கிராம்பு, சுக்கு வகைக்கு 5 பங்கு, ஓமம், இந்துப்பு வகைக்கு 6 பங்கு சேர்ந்த சூரணத்தில் 260-390 mg வீதம் கொடுக்க மந்தம் நீங்கும்; உணவு நன்றாக சீரணமாகும்.
கிராம்பும் நிலவேம்பும் சம அளவெடுத்து குடிநீர் செய்து கொடுக்க பசியுண்டாகும்; அயர்ச்சி நீங்கும்; சுரத்திற்குப் பின் வரும் களைப்பைப் போக்கும்.
நிலாவாரைக் கஷாயத்தில் 130-195 mg கிராம்புத் தூளும், சுக்குப் பொடியும் சேர்த்து சாப்பிட மலக்கட்டு நீங்கி சுகமாய்ப் பேதியாகும்.
கராம்பெண்ணெய் பல் வலிக்கு நன் மருந்தாகும்.
~சூர்யநிலா