கசகஸ்தான் நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவில் மிகப் பாரியளவில் மீத்தேன் வாயு கசிவாகி வந்துள்ளமை, நவீன செய்மதி ஒன்றின் மூலம் வேவு பார்க்கப் பட்டு உறுதி செய்யப் பட்டுள்ளது.
இது பருவ நிலை மாற்றம் தொடர்பான தன்னார்வலர்களுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆய்வை உறுதி செய்த குழு கசகஸ்தான் போன்ற நாடுகளில் மறைவான கிராமப் பகுதிகளில் மிக அதிகளவில் வெளியேற்றப் படும் மீத்தேன் போன்ற பச்சை வீட்டு விளைவு வாயுக்களை நவீன செய்மதிகள் மூலம் இனம் காண்பது அவசியம் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் குறித்த Karaturun East field எனப்படும் தொழிற்சாலையில் கடந்த 205 நாட்களில் சுமார் 131 000 டன் எடை கொண்ட மீத்தேன் வாயு சுற்றுச்சூழலுக்கு கசிந்திருப்பதாக கணிப்பிடப் பட்டுள்ளது. உலகில் ஒரு எண்ணெய்க் கிடங்கில் இருந்து வெளியான மிக அதிகளவு மீத்தேன் வாயு அளவு இது என்பது
குறிப்பிடத்தக்கது.
பல விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை Environmental Science & Technology Letters என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது. மேலும் 2023 ஜூன் 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த கசிவு ஆயிரக்த கணக்கான டன் தண்ணீர் மற்றும் கடையப் பட்ட மண் போன்றவை பயன்படுத்தப் பட்டு டிசம்பர் 23 ஆம் திகதியளவில் வாயு வெளியேற்றம் கணிசமான அளவு குறைக்கப் பட்டது.
இயற்கை வாயுவில் 90% வீதம் மனிதத் தேவைக்காக வெளியேற்றப் படும் மீத்தேன் வாயு உலக வெப்பமயமாதலில் 1/3 பங்கு வகிப்பதும் நோக்கத்தக்கது ஆகும்.
Information - SciTechDaily