free website hit counter

50 ஆண்டுகளின் பின் நிலவு நோக்கி மனிதப் பயணம் !

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐம்பது ஆண்டுகளின் பின், 2026 ஏப்ரல் 1 அன்று NASA விண்வெளி ஆய்வு மையம்,  Artemis II-ஐ வெற்றிகரமாக ஏவியது. இது நிலவை நோக்கிய பயணமாக இருந்தாலும். நிலவில் தரையிறக்கும் பயணம் அல்ல.

இந்த நிலவுப் பயணத்தில் மேலும் சில சிறப்புக்கள் உண்டு. 

நிலவிற்கு அருகில் செல்லும் முதல் பெண் வீரர்,முதல் கருப்பின விண்வெளி வீரர்,  நிலா பயணத்தில் பங்கேற்கும் முதல் கனடியர் எனும் முக்கியத்துவங்களும் இந்தப் பயணத்தில் உண்டு. மொத்தம் சுமார் 10 நாட்கள் அமையும் இந்தப் பயணம் நிலவைில் இறங்காது நிலவைச் சுற்றி வரும் ஒரு பயணமாகும். ஆனால் விண்வெளியில் மனிதர்கள் இதுவரை சென்றதிலேயே அதிக தூரம் (~2.5 லட்சம் மைல்கள்) பயணம்
செய்வதாக அமையும். 

நேற்று வெற்றகரமாக விண்ணுக்கு ஏவப்பட்ட இந்த விண்கலம் பூமி சுற்றுப்பாதையில் சோதனைகள் மேற்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து  நிலவுக்கான பாதையில் செல்லும். சுமார் 4 நாட்களில் நிலவின் அருகே சென்று சேரும். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் Orion விண்கலம் மற்றும் SLS ராக்கெட், என்பவையும் எதிர்கால விண்பயணங்களுக்காக முக்கியமாக, வாழ்வாதார அமைப்புகள் (life support) மற்றும் பாதுகாப்பு சோதனைகள் நடைபெறுகின்றன.

இது Artemis III மற்றும் அடுத்த நிலா தரையிறக்கத்தின் முன்னேற்றமாக, நிலவில் நிரந்தர முகாம் அமைப்பதற்கான முக்கிய கட்டமாகும். அந்த வகையில் Artemis II  மனிதர்களுடன் நிலவை சுற்றி வரும் வரலாற்று பயணம் தற்போது பயணம் நடந்து கொண்டு இருக்கிறது. இது எதிர்கால நிலா தரையிறக்கம் மற்றும் Mars பயணத்திற்கு அடிப்படை அமைக்கிறது

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula