நெகிழி' தெரிந்தோ தெரியாமாலோ நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட எமன்!
அது நம் இரத்தநாளத்தில் பாய்கிறது! நம் உடல் உறுப்புக்களில் ஒட்டிக்கொள்கிறது மற்றும் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாகவும் உள்ளது. நெகிழிகள் கொடுமையை முடிவுக்கு கொண்டு வரவும், நமது பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கவும் நாம் இப்போதே செயல்பட வேண்டும் என புவி நாளான இன்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார் earthday.org இன் தலைவர் கேத்லீன் ரோஜர்ஸ்.
இன்று ஏப்ரல் 22ஆம் திகதி புவி நாளை 190க்கும் மேற்பட்ட நாடுகள் அனுஷ்டித்துவருகிறது. சூற்றுச்சுழலை அதன் சூழலை குலைக்காது பாதுகாக்கவும் மக்களிடையே அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 1970 ஆம் ஆண்டு அமெரிக்க புவியில் அமைப்பாளர்களால் இத்தினம் கொண்டுவரப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கரும்பொருளால் இப்புவி நாள் முன்னுரிமை கொடுக்கப்படுவது போல் இவ்வாண்டும் நெகிழிக்கு எதிராக புவி (Planet vs. Plastics) எனும் கரும்பொருளை முன்வைத்துள்ளனர். இது 2040க்குள் நெகிழி உற்பத்தியை 60% குறைக்க அரசாங்கத் தலைவர்கள், வணிகங்கள் மற்றும் அன்றாட மக்களைக் கேட்டுக்கொள்வதுடன் இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி வகையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
அதேபோல் 2024ஆம் ஆண்டில் வரலாற்றில் மிகப் பெரிய புவி நாள் தூய்மைப்படுத்தும் நிகழ்வை நடத்த அமைப்பாளர்கள் முயற்சித்து வருகின்றனர். earthday.org; மலேசிய நிறுவனங்களுடன் இணைந்து சுற்றுலாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்நாட்டின் முக்கியத்தும் பெற்ற பினாங்கு தீவை தூய்மைப்படுத்தும் செயல்திட்டத்தை குறைந்தது 100,000 தன்னார்வலர்களுடன் செயற்படுத்தவுள்ளது. மேலும் இந்நாளில் 1 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நம்மில் பலர் நெகிழித்தீமைகளை அறிந்து அதன் பாவனைகளை குறைத்து வருகிறோம்; அதேபோல் நம் அருகில் இருப்பவர்களுக்கும் அறிவிக்க முயற்சிப்போம்; ஏனனில் நமக்கு இருப்பது ஒரே ஒரு புவிதான்!
கூகுள் தேடுபொறியில் இன்றைய புவிநாள் லோகோ உருவானது இப்படிதான்..