இந்திய சினிமாவின் நடிகர் திலகமாக மாபெரும் புகழ்பெற்று மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு
உலக சாதனையாளர்களை நினைவுபடுத்திவரும் கூகுள் இம்முறை நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் உருவங்கள் கொண்டு தனது லோகோவை வடிவமைத்து போற்றியிருப்பது குறிப்பிடதக்கது.
இன்றைய இந்த டூடுலை இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த கலைஞர் நூபூர் ராஜேஷ் சோக்ஸி வரைந்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் இந்திய திரையுலகில் ஒரு சின்னமான திகழும் சிவாஜி கணேசன் அவர்களின் கலை, அவர்களின் கதை மற்றும் மரபு ஆகியவற்றைக் கொண்டாடும் எண்ணம் எப்போதுமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் அவரது திரைப்படங்களைப் பார்த்து வளரவில்லை என்றாலும், பெங்களூருக்குச் சென்றதிலிருந்து நான் சில தென்னிந்திய சினிமாவை ஆராய்ந்தேன். எனவே இது ஒரு தற்செயல் அழகாக வந்தது. எனது வேலையின் மூலம் அவருக்கு ஒரு சிறிய அஞ்சலி செலுத்த முடிந்தது ஒரு முழுமையான மரியாதை. மேலும் சிவாஜி கணேசன் பன்முகத்தன்மை கொண்டவர். அவர் திரையில் சித்தரித்த பல்வேறு பாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர். திரைப்படங்களில் அவரது தோற்றத்தின் பரிணாம வளர்ச்சியையும், பல ஆண்டுகளாக அவர் விசித்திரமான முக முடியையும் பார்த்தேன். அவர் திரையில் சித்தரித்த கதாபாத்திரங்களின் விவரிப்பில் தன்னை மூழ்கடிப்பதை கவனித்தேன். அதை டூடுல் மூலம் அவரது கலை வரம்பை பிரதிநிதித்துவப்படுத்த நான் உண்மையில் விரும்பினேன்.
சிவாஜி கணேசன் அவர்கள் மறைந்தாலும் தொடர்ந்து தனது படைப்புக்கள் மூலம் ஊக்குவித்து வாழ்ந்து வருகிறார், அதனால் அதிகமான மக்கள் தங்கள் கனவுகளைத் துரத்தி, ஆக்கப்பூர்வமாகவும், சுதந்திரமாகவும், நம்பிக்கையுடனும் வெளிப்படுத்த முன்வருவார்கள் என நம்புவதாக நூபூர் ராஜேஷ் சோக்ஸி தெரிவித்துள்ளார்.
கூகுள் இதுவரை காலமும் அல்லாது பல துறைசார் சாதனையாளர்களை தேடி கொண்டுவந்து சிறப்புபடுத்தி வருகிறது. உலகளவில் யாருக்கும் தெரிந்திராத சாதனையாளர்களை தெரியப்படுத்திவருவதுதான் அதன் சிறப்பம்சமாக உள்ளது.
அவ்வகையில் இம்முறை இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் சுபத்ரா குமாரி சவுகான், இந்திய விமானி மற்றும் வடிவமைப்பாளர் சர்லா தக்ரல் அத்தோடு இந்தியாவில் மருத்துவராகப் பயிற்சி பெற்ற முதல் பெண் கடம்பினி கங்குலி ஆகியோரையும் கூகுள் டூடுல் மூலம் கௌரவப்படுத்தியிருந்தது.
அதேவேளை கூகுள் குறிப்பிட்ட டூடுலை வடிவமைப்பதற்கு அந்த நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களை சிறப்பு வரைவு கலைஞர்களாக அறிமுகப்படுத்திவருவதும் குறிப்பிடதக்கது.