திருச்சியை அடுத்த, பெரம்பலூர்-துறையூர் நெடுஞ்சாலை,யில் நாகலாபுரத்தில் அமைந்துள்ளது அந்த அதிசய நடுவில்! ஒருவரின் நினைவாக நடப்படுகின்ற கல்லிற்கு நடுகல் என்று பெயர்.
இந்த நடுகல் ஆனது பொதுவாக இறந்த ஒருவரின் நினைவாக அவர் உருவம் பொறித்த கல்லையும் அதில் அவரைப்பற்றிய குறிப்புகளையும் குறித்து குறிப்பிட்ட அளவில் கல் ஒன்றினை வடிவமைத்து நடுவர்.
நடப்பட்ட கல்லினை தொடர்ந்து பல்வேறு படையல்கள் மூலமாக வழிபட்டு வரும் மரபு இருக்கின்றது. இதில் போரில் இறந்த வீரன் அல்லது ஏதேனும் ஒன்றை மீட்பதற்காக சண்டையிட்டு இறந்து விடுதல், விலங்குகளுடன் சண்டையிடுதல், அல்லது சண்டையிட்ட விலங்குகள் ஆகியவற்றிற்கு கல் உரு உருவாக்கி நடுகல்லாக வழிபட்டு வருகின்றனர்.
இதில் காளை ஒன்றிற்காக உருவாக்கப்பட்ட நடுகல் இங்கே அமைந்துள்ளது. பெரம்பலூர் துறையூர் நெடுஞ்சாலையில் நாகலாபுரம் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் இந்த நடுகல் அமைந்துள்ளது. தற்போது சாலை விரிவாக்க பணி நடைபெற நடைபெற்று வருகிறது.
இதற்காக இதனை இட மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது பொதுவாக வீரமரணமடைந்த வீரன், நாய், சேவல் போன்றவற்றுக்கு எல்லாம் நடுகல் சான்றுகள் உள்ளன. அதேபோன்று ஏறு தழுவுதல் நிகழ்வுக்கும் நடுகல் சான்று உள்ளது.
இதில் காளை ஒன்றிற்காக உருவாக்கப்பட்ட நினைவுக்கல்லாக , உள்ளது. இதன் மூலம் தமிழ் முன்னோர் தாம் விருப்பத்துடன் வளர்த்த காளை மாட்டிற்காக நடுகல் உருவாக்கியிருப்பது வியப்பை அளிக்கிறது. காளை ஒன்றிற்காக உருவாக்கப்பட்ட நடுகல் என ஆவணம் இதழில் தமிழ் ஆர்வலர் ஸ்ரீதர் என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது