free website hit counter

பிரபல திரைப்பட நடிகரும் எம்புரான் பட இயக்குநருமான பிரித்விராஜுக்கு, இந்திய வருமான வரித்துறை நோட்டீஸ்

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ், மலையாளம் உள்ளிட்ட படங்களை நடித்து பிரபலமாக இருப்பவர் பிரித்விராஜ். இவரது இயக்கத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடித்து வெளியாகி இருக்கிறது, L2 எம்புரான் என்ற திரைப்படம். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வந்தாலும்,  படத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இதில், குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட  வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

அதேபோல், தமிழ்நாட்டிலும் இந்த திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதற்க் காரண்ம, முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றதுதான். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு விவசாயிகளும் படத்திற்கு எதிராக போராட்டங்களை அறிவித்தனர். கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து சர்சைக்குரிய காட்சிகள் படத்திலிருந்து  நீக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.

இதுஒருபுறம் இருக்க, எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளர்  கோகுலம் கோபாலனுக்கு சொந்தமான சென்னை அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதில் கணக்கில் வராத ரூ.1.50 கோடி கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் எம்புரான் படத்தின் இயக்குநர் பிரித்விராஜ்-க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் நடித்த மற்றும் இணைந்து தயாரித்த மூன்று படங்களில் இருந்து அவர் பெற்ற வருவாய் குறித்து விளக்கம் கேட்டு அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula