free website hit counter

சுந்தர் சி - நடிகர் ஜெய் புதிய கூட்டணி!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குஷ்பூ சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் பட்டாம்பூச்சி.1980-களில் நடைபெறும் சைக்கோ திரில்லர் கதை தான் பட்டாம்பூச்சி.

பல கொலைகளை செய்த ஒரு கொடூர சைக்கோ கொலைகாரனுக்கும், பொறுப்புகளை தவிர்த்து அமைதியாக வாழ நினைக்கும் ஒரு காவல்துறை அதிகாரிக்கும் நடக்கும் மைண்ட் கேம் தான் கதை. ஒருவரை ஒருவர் புத்திசாலித்தனத்தாலும் உடல் பலத்தாலும் முந்த துடிப்பது திரைக்கதையில் கூடுதல் பலம். செய்யாத ஒரு கொலைக்காக தூக்கு தண்டனை பெறப்போகும் சுதாகர் தண்டனைக்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் இன்னும் போலீசுக்கு பிடிபடாத பல கொலைகளை செய்த சைக்கோ கொலைகாரன் பட்டாம்பூச்சி என்ற ரகசியத்தை ஒரு நிருபரிடம் சொல்ல அங்கிருந்து வேகம் பிடிக்கும் கதை ஒவ்வொரு காட்சியிலும் நம்மை இருக்கையின் நுனிக்கு வரவழைக்கும்.

கொடூர சைக்கோவாக முதன்முறையாக நெகட்டிவ் ரோலில் ஜெய்யும், அவனை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரத் துடிக்கும் காவல்துறை அதிகாரியாக சுந்தர்.சியும் நடிக்கின்றனர். கதாநாயகியாக ஹனிரோஸ், முக்கிய கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி ,பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கின்றனர். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: