இசையில் ஆர்வமுள்ளவர்கள் நடிகர் சிம்புவும் ஜெய்யும். சிம்புவின் தம்பி குறளரசுனுடன் ஒன்றாகப் படித்தவர் நடிகர் ஜெய்.
சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் சிறந்த இசையமைப்பாளர். அதேபோல் ஜெய்யின் பெரியப்பா தேவா சாதனைகள் செய்த இசையமைப்பார். சிம்பு, குறளரசன், ஜெய், ஸ்ரீகாந்த் தேவா ஆகிய நால்வரும் இணைந்து தனியிசை ஆல்பம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதுவொரு பக்கம் இருக்க, சினிமாவில் தான் எடுக்கும் முடிவுகளைப் பற்றி சிம்புவுடன் ஆலோசனை நடத்தாமல் ஜெய் எடுக்கமாட்டார் என்கிறார்கள்.
சமீபத்தில் சிம்புவை வீட்டுக்கு அழைத்த ஜெய் அவருடனும் பிரேம்ஜி, வெங்கட் பிரபு உள்ளிட்டவர்களுடன் இரவு பார்ட்டியைக் கொண்டாடியிருக்கிறார். மாநாடு படம் சிறப்பாக வந்திருப்பதைப் பற்றி அப்போது மனம்விட்டு பகிர்ந்துள்ளனர். அப்போது, ‘நான் வில்லனாக நடிக்கலாமா? எடுபடுமா?’ என சிம்புவிடம் ஜெய் ஆலோசனை கேட்க..அதற்கு சிம்பு நல்ல முடிவு ஆனால், கதையில் கதாநாயகனுக்கு இணையான வில்லன் கதாபாத்திரமாக இருந்தால் மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும்’ என அறிவுரை கூறியுள்ளார். இதையடுத்து, பிரபல இயக்குநர் அட்லி இயக்கத்தில் ‘ராஜா ராணி’ படத்தில் நடித்த ஜெய், அந்த நட்பில் அவரது தயாரிப்பில் உருவாகும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தைக் கேட்டுப் பெற்றுள்ளார் ஜெய். இது, ‘அந்தகாரம்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ குறைந்த முதலீட்டில் தயாரிக்கும் படம். அடுத்து தனக்கு அழுத்தமான வில்லன் வேடம் இருந்தால் தரும்படி தன்னுடைய இயக்குநர் நண்பர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜிடமும் கேட்டுள்ளாராம் ஜெய்.