free website hit counter

தமிழுக்கு வரும் டொவினோ தாமஸ் !

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் கேங்ஸ்டராக வரும் மலையாள நடிகர் டொவினோ தாமஸை தமிழ் ரசிகப்பெருமக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். கேரளத்தின் எபோலா வைரஸ் தாக்குதல் கதையை ‘வைரஸ்’ என்ற படமாக எடுத்தபோது அதில் மாவட்ட கலெக்டராக வருவார்.

மோகன்லாலின் ‘லூசிஃபர்’ படத்தில் பட்டையைக் கிளப்பினார். தற்போது மலையாள சினிமாவின் மிக முக்கியமான நடிகராக மாறியிருக்கும் டொவினோ தாமஸ் நடிப்பில், மலையாளத்தில் வெளியாகியிருக்கும் ‘களா’ திரைப்படம் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அந்தப் படத்தில் தமிழ் இளைஞனாக வரும் சுமேஷ் மூர் கதாபாத்திரத்தை நன்கு விளையாடவிட்டு, அவன் மூலமாகப் புத்தி பெறுகிற கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருப்பது பலருடைய பாராட்டையும் பெற்றிருக்கிறது. ‘படம் முழுவதும் தாங்களே முக்கியத்துவம் பெறவேண்டும் என்று நினைக்கிற ஹீரோக்களுக்கு மத்தியில் இப்படி ஒருவரா?’ என வியக்க வைத்திருக்கும் டொவினோ தாமஸுக்குத் தமிழ்த் திரையுலகிலிருந்து தற்போது ஏகப்பட்ட அழைப்புகள். அதில் முக்கியமான ஒன்று வெற்றிமாறனுடையது. சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அவருடன் பேச்சு வார்த்தை நடத்தில் வருகிறார்கள்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: