free website hit counter

தொடரும் முதல்வரின் அபிவிருத்தி திட்டங்கள் ...

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சென்னை: ரூபா.17,297 கோடி மதிப்பிலான 33 திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

ஒப்பந்தங்கள் மட்டுமின்றி 14 திட்டங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்கு பல்வேறு திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறார். அதிலும் அனைத்து துறைகளிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

2 மாத காலமாகவே, கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முழு வீச்சில் இறங்கி அதிரடிகளை மேற்கொண்டார். நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மேகதாது அணை விவகாரம் போன்ற விவகாரங்களுக்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மற்றொருபக்கம், மாநில வளர்ச்சி குழுவை மறு சீரமைப்பு செய்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை நோக்கிய பாதையில் பயணிக்க வழிகாட்டி வருகிறார். இதனை தொடர்ந்து தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு புதிய தொழிற்சாலைகளையும், நிறுவனங்களையும் ஏற்படுத்தி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாகதான், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. சென்னை கிண்டியில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 33 தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. Capital land, Adhani, JSW, ZF-WABCO உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழக அரசுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்ளவுள்ளது. இதைதவிர மேலும் 14 திட்டங்களுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் இந்த நிகழ்சியில் பங்கேற்க உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூபா.17,297 கோடி ரூபாய் மதிப்பிலான 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாக உள்ளன. குறிப்பாக ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்மூலம் 54 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: