free website hit counter

சென்னை - கோவை வந்தே பாரத் ரெயில் முன்பதிவு தொடக்கம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.
சென்னை,

நாளை மதியம் 3 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திரமோடி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையாறு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்று சென்னை-கோவை இடையேயான 'வந்தே பாரத்' அதிவிரைவு ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த ரெயில் சென்னையில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியாக கோயம்புத்தூர் வரை இரு மார்க்கமாகவும் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை - கோவை வந்தே பாரத் ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. 6 மணி நேர பயணத்திற்கு ரூ.1,057 முதல் ரூ.2,310 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான 'வந்தே பாரத் ரெயில் (எண்: 20644) கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.

செல்லும் வழியில், திருப்பூருக்கு காலை 6.35 மணிக்கு சென்றடைந்து, காலை 6.37 மணிக்கு புறப்படும் ரயில், ஈரோட்டுக்கு காலை 7.12 மணிக்கு சென்றடைந்து, காலை 7.15 மணிக்கு புறப்படும். சேலத்துக்கு காலை 7.58 மணிக்கு சென்றடைந்து, காலை 8 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல்-கோவை இடையிலான 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 20643), மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும். வரும் வழியில், சேலத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்தடைந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் ரயில், ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு வந்தடைந்து, மாலை 6.35 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு இரவு 7.13 மணிக்கு வந்தடைந்து, இரவு 7.15 மணிக்கு புறப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: