உக்ரைன் - ரஷ்யா மோதல்களின் ஆறாவது நாள் இன்று. கியேவை நோக்கி இராணுவம் முன்னேறுகிறது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மாஸ்கோ மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் முயற்சிகள் பலனளிக்காத நிலையில், உக்ரைனில் யுத்தம் வலுவடைகிறது. கடந்த சில மணி நேரத்தில் இரண்டாவது உக்ரேனிய நகரத்தின் மீது நிகழ்த்தபட்ட ரஷ்ய ஏவுகணைத்தாக்குதலை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசியஉக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கண்டித்தார்.
இதேவேளை ரஷயாவிற்கு ஆதராவாக பெலாரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைனின் செர்னிஹிவ் பிராந்தியத்திற்குள் நுழைந்துள்ளன என்ற தகவலை வடக்கின் பிராந்திய பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் விட்டலி கிரிலோவ் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் " " உக்ரைனில் நடக்கும் போர் நடவடிக்கைகளில் பெலாரஸ் பங்கேற்காது" என பெலாரஷ்ய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், " வேறு வழியின்றி ரஷ்யா உக்ரைனில் தனது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் பிராந்தியத்தில் அமைதியின் நலனுக்காக யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவே நாம் தயாராகஉள்ளோம் " என்றார்.
"குறிப்பிட்ட இலக்குகள் அடையப்படும் வரை ரஷ்ய ஆயுதப் படைகளின் சிறப்பு இராணுவ நடவடிக்கை தொடரும்" என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அவர் மேலும் கூறுகையில், " உக்ரைனின் இராணுவமயமாக்கல் மற்றும் நாசிஃபிகேஷன் மற்றும் மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட இராணுவ அச்சுறுத்தலில் இருந்து ரஷயாவை பாதுகாக்கும் நோக்கமாகக் கொண்டுள்ள இராணுவநடவடிக்கை " என விளக்கம் கொடுத்துள்ளார்.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யப் படைகளின் கடுமையான குண்டுவீச்சுக்கு பல பொதுமக்கள் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் Mykhailo Podolyak, உக்ரைனியர்களிடையே பீதியை பரப்புவதற்காக குடியிருப்பு பகுதிகள் மற்றும் குடிமக்கள் உள்கட்டமைப்பு உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்யா வேண்டுமென்றே குண்டுவீசி வருகிறது என்றார்.
உக்ரைனில் ரஷ்யா தனது நடவடிக்கைகளை சிறப்பு நடவடிக்கை என்று அழைக்கிறது. இது பிராந்தியத்தை ஆக்கிரமிப்பதற்காக அல்ல, ஆனால் அதன் தெற்கு அண்டை நாடுகளின் இராணுவ திறன்களை அழித்து ஆபத்தான தேசியவாதிகள் என்று கருதுவதை கைப்பற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கியேவ் நோக்கி நகரும் ரஷ்ய படைகளின் வாகனங்கள் சுமார் 60 கிலோ மீட்டருக்கு நிற்பதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக Maxar Technologies இன் புதிய செயற்கைக்கோள் படங்களில், இராணுவ நெடுவரிசை கவச வாகனங்கள், டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் பிற தளவாட வாகனங்களால் நிறைந்துள்ளது.
அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக கூடுதல் தடைகளையும் உக்ரேனிய இராணுவத்திற்கு அதிக ஆயுதங்களையும் வழங்குவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் தெரிவித்திருப்பதாக அறிய வருகிறது.