உக்ரைன் ரஷ்ய படையெடுப்பின் நேரடி விளைவாக சுவிற்சர்லாந்தில் எரிபொருளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
லீட்டருக்கு 95 பெட்ரோல் லிட்டருக்கு 2 பிராங்குகளை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏனென்றால், எண்ணெய் விலை ஏறுவதை நிறுத்தவில்லை. மேலும் ரஷ்யாவிற்கு எதிராக அதிக பொருளாதாரத் தடைகள் போடப்பட்டதால் அது தொடரும்.
ரஷ்யா - உக்ரைன் ஜெனிவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கலாம் !
முன்னாள் பெட்ரோலியம் யூனியன் தலைவர் டேனியல் ஹோஃபர் கருத்துப்படி, "நிலைமை தொடர்ந்து மோசமடைந்தால் கச்சா விலை மேலும் உயரும்". பணம் செலுத்தும் போக்குவரத்து தடைபட்டால், ரஷ்யாவிலிருந்து எரிவாயு விநியோகம் நிறுத்தப்படும் அபாயமும் உள்ளது, இதனால் எண்ணெய் தானாகவே விலை உயர்ந்ததாகிவிடும்.
"சுவிற்சர்லாந்தில் பெட்ரோல் விலை 2 பிராங்குகளுக்கு மேல் இருக்கப் போகும் நிலை, இன்னும் சில காலத்துக்கு இருக்கும்" என்று ஹோஃபர் கூறினார்.