சுவிற்சர்லாந்தின் தென்பகுதியில் தொடரும் கன மழைகாரணமாக, இரண்டு நாட்களுக்கு முன்பு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அதே இடத்தில், மற்றொரு பெரிய மண்சரிவு ஏற்பட்டு, A2 நெடுஞ்சாலையில் விழுந்தது. இதனால் நெடுஞ்சாலைப் போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
காலை 10 மணியளவில் நடந்த இந்த அனர்த்தத்தில் வடக்கு நோக்கிச் செல்லும் சாலையின் பெரும்பகுதியை மூடியுள்ளதால், A2 நெடுஞ்சாலையின் தெற்கு திசையில், இடது பாதை தடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தேவையான மாற்றுப்பாதைகள் உருவாக்குகின்றனர்.
இதேவேளை காலை லுகானோ பகுதியிலுள்ள கூட்டுறவு நிறுவனத்துக்குச் சொந்தமான, பெட்ரோல் நிலைய தரிப்பிடக் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இன்று காலை 9.30 மணியளவில் நடந்தது. சென்ற இரு வாரங்களுக்கு முன்னதாக புதிதாகத் திறக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தின் கூரைப்பகுதி இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குறித்த சம்பவங்களில் உயிர்ச்சேதங்களோ அன்றிக் காயங்களோ ஏற்பட்டதாக இதுவரை தெரியவில்லை.