கோவிட் மாறுபாடான ஒமிக்ரோனின் வேகமான பரவுகையால் அமெரிக்காவில் புத்தாண்டு தினமான சனிக்கிழமையன்று 2723 விமானங்களும், உலகளவில் சுமார் 4698 விமானங்களும் ரத்து செய்யப் பட்டுள்ளன.
சில விமானப் பயணங்களது ரத்துக்கு மோசமான வானிலையும் காரணமாகக் கூறப்படுகின்றது. இதனால் உலகளவில் விமானப் பயணிகள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தவிர சனிக்கிழமை அமெரிக்காவில் சனிக்கிழமை 5993 விமானங்களதும், உலகளவில் 11 043 விமானங்களதும் பயணங்கள் தாமதமாகியுள்ளன. அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் விமான சேவை நிறுவனமே இப்பயணங்களது ரத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக சிக்காக்கோ நகர விமான நிலையங்கள் சனிக்கிழமை பகல் மோசமாகத் தாக்கப் பட்டன. உலகளவில் கோவிட் இன் ஒமிக்ரோன் பரவுகை காரணமாக விமானப் பயணத் துறை மிக அதிகளவில் பாதிக்கப் பட்டு வருகின்றது.
இதற்கு முக்கிய காரணமாக அதிகளவு பைலட்டுக்கள் உட்பட பல்வகைப் பட்ட விமான சேவை ஊழியர்கள் கோவிட் தொற்று காரணமாக தனிமைப் படுத்துதல் செய்து கொண்டமையால் பணிக்குத் திரும்ப முடியாதது என்பது அமைந்துள்ளது. நத்தார் வார இறுதியில் மாத்திரம் உலகளவில் சுமார் 7500 விமானங்களது பயணங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளதாகப் புள்ளி விபரம் கூறுகின்றது.