இங்கிலாந்தின் பிரதம மந்திரி பதவியில் இருந்து லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் ரிஷி சுனக் வெற்றி பெற்றார்.
கடந்த வாரம் லிஸ் டிரஸின் ராஜினாமாவால் தூண்டப்பட்ட ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ரிஷி சுனக் ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
முன்னால் பிரதமர் டிரஸ் ராஜினாமா செய்த சில நாட்களுக்குப் பிறகு அவரது பேரழிவுகரமான வரிக் குறைப்புத் திட்டங்கள் மற்றும் கொள்கை யூ-டர்ன்கள் இங்கிலாந்து வணிக சந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தியது. முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியை இங்கிலாந்து சந்திக்க தொடங்கியிருப்பதாகவும் இந்நிலையில்
புதிய பிரதமர் போட்டியில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார்.
புதிய பிரதமரான ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெற்றோர்கள் கென்யாவிலிருந்து இங்கிலாந்து புலம்பெயர்ந்து வந்தவர்களாவர். பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட லிங்கோல்ன் கல்லூரியில் சேர்ந்து தத்துவம், அரசியல், பொருளாதார பிரிவில் பட்டம் பெற்ற பின் கன்சர்வேடிங் கட்சியில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் படிப்படியாக அரசியில் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு முன்னேறினார்.
இதேவேளை உலக தலைவர்கள் பலரும் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வாகியுள்ள ரிஷி சுனக்கிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.