நேற்று முன்தினம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரத்தின் உச்சமாக மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது இதனால் புளோரிடா மாகாணத்தின் பல நகரங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. மேலும் இந்தச் சூறாவளியால் கணிசமான உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாகவும் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போய் உள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.