அண்மையில் மத்திய அமெரிக்க நாடான நிக்காரகுவா தாய்வானுடனான தனது ராஜதந்திர உறவுகளைத் துண்டித்ததுடன் அதனை சீனாவுடனான தொடர்பாக புதுப்பித்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் தனது நாட்டிலுள்ள தாய்வான் தூதரகத்தைக் கைப்பற்றியதுடன் அதன் அனைத்து உடமைகளையும் சீனாவுக்கு அளிக்கவும் முன் வந்துள்ளது.
இதனால் தனது முன்னால் நட்பு நாடான நிக்காரகுவா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக வியாழக்கிழமை தாய்வான் அறிவித்துள்ளது. மனகுவாவின் கத்தோலிக்க அமைப்பு ஒன்றிட்கு இந்த தாய்வான் தூதரக உடமைகள் யாவும் ஏற்கனவே விற்கப் பட்டவை என்ற போதும் தற்போது அது செல்லாது என நிக்காரகுவா தெரிவித்துள்ளது.
மேலும் தாய்வான் அமைந்துள்ள நிலப் பரப்பு சீன தேசத்துக்கு சொந்தமானதாகவேத் தான் அடையாளம் காண்பதாகவும், உலகில் ஒரேயொரு சீன தேசமே இப்பரப்பில் உள்ளது என்றும் நிக்காரகுவா அதிபர் டானியல் ஒர்ட்டேகா தெரிவித்துள்ளார். நிக்காரகுவா அரசின் இந்த செயற்பட்டை தாய்வான் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது.