நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரான அவுக்லேண்டில் செவ்வாய்க்கிழமை 1 நபரிடம் கோவிட்-19 தொற்று இனம் காணப் பட்டதை அடுத்து அங்கு நாடு முழுதும் 3 நாட்களுக்கு அதிரடி லாக்டவுன் உத்தரவைப் பிறப்பித்துள்ளார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்.
இந்த லாக்டவுனானது அவுக்லேண்டில் தொடர்ந்து 7 நாட்களுக்கும், மற்றைய பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கும் அமுலில் இருக்கும்.
தனது தடையுத்தரவு குறித்து கருத்துத் தெரிவித்த ஜெசிந்தா ஆர்டெர்ன் அடையாளம் காணப்பட்ட குறித்த கோவிட் தொற்று மிக ஆபத்தான டெல்டா திரிபா என்பது குறித்து பரிசோதிக்கப் படுவதாகவும், ஆனால் இது இன்னமும் உறுதிப் படுத்தப் படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.