உலக வங்கியின் நிதியுதவியுடன் கூடிய நிதித் துறை பாதுகாப்பு நிகர வலுவூட்டல் திட்டம் தொடர்பான பொருத்தமான உடன்படிக்கையில் ஈடுபடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2023 இல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், உலக வங்கி நிதியின் கீழ் நிதித் துறையின் பாதுகாப்பு வலையை வலுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அமைச்சரவையின் ஆரம்ப கொள்கை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது.
இந்த ஒப்புதலின்படி நடைபெற்ற கடன் ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்திருந்தது.
ஒப்பந்தத்தின்படி, இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தின் மூலதனமாக்கல், மத்திய வங்கியின் நிறுவன திறன் மேம்பாடு மற்றும் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மேற்பார்வை செய்தல் ஆகிய கூறுகளின் கீழ் கடன் வழங்கப்படும்.
இதன்படி,செவ்வாய் (டிச.05) அன்று நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.