free website hit counter

இன்று நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் சங்கங்கள் இன்று (27.10.2023) பாடசாலைகளுக்கு முன்பாக கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

பத்தரமுல்லை - பெலவத்த பிரதேசத்தில் கடந்த (24.10.2023) ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நடத்திய கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மதியம் 1.30 மணிக்கு பாடசாலை நிறைவடைந்ததும் பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை இன்றுடன் (27) முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்றாவது பாடசாலை தவணை எதிர்வரும் (01.10.2023) ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இம்மாதம் எதிர்வரும் 30, 31ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula