அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் 2ஆம் பிரிவிற்கமைய ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை (15) பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் , நேற்று திங்கட்கிழமை (13) ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெட்ரோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் என்பனவும் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் இன்றைய தினம் அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.