இலங்கையில் கொரோனா நோய்த்தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் அங்குள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளர்கள் நிரம்பிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் டெல்டா பிறழ்வு பரவல் தன்மை வேகமெடுத்துள்ளதால் அதன் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள், நோயாளர் விடுதிகள், இடவசதியுள்ள அனைத்து இடங்களிலும் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் வைத்தியசாலைகளில் பாரிய இடநெருக்கடி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் இடபற்றக்குறையால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.