வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு
இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி புதிய வரலாற்றை படைக்க இருக்கிறது. அதாவது இந்திய அணி 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற சாதனையை படைக்க உள்ளது.
இந்திய அணி முதல் முறையாக 1974-ம் ஆண்டு ஜூலை 13-ந் திகதி இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது. இதில் 4 விக்கெட் வித்தியாத்தில் தோல்வியை தழுவியது.
ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை உலகளவில் 28 அணிகளால் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. தற்போது ஒருநாள் ஆட்டத்தில் 1000-ஆவது போட்டியில் விளையாட உள்ள முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. இதற்கு அடுத்த படியாக ஆஸ்திரேலியா அந்த நிலையை அடையும்.
முதல் போட்டிக்கு அஜீத் வடேகரும், 100-வது போட்டிக்கு கபில்தேவும், 200-வது மற்றும் 400-வது போட்டிக்கு அசாருதீனும், 300-வது போட்டிக்கு தெண்டுல்கரும், 500-வது போட்டிக்கு கங்குலியும், 600-வது போட்டிக்கு ஷேவாக்கும், 700, 800, மற்றும் 900-வது போட்டிகளுக்கு டோனியும் கேப்டனாக இருந்துள்ளனர். ஆயிரமாவது ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக பொறுப்பேற்கும் பெருமையை ரோகித் சர்மா பெறுகிறார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 1000-வது போட்டி என்பதால் இந்திய அணி விளையாடும் ஆட்டத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.