எகிப்து அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செனகல் அணி
ஆப்பிரிக்க கோப்பைக்கான கால்பந்து போட்டி கேமரூனில் நடந்தது. 24 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் செனகல்-எகிப்து அணிகள் மோதின. ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை.
கூடுதல் நேரத்திலும் இதே நிலையே நீடித்தது. இதனால் பெனால்டி ஷூட்அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் செனகல் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி முதல் முறையாக ஆப்பிரிக்க கோப்பையை கைப்பற்றியது.
இதற்கு முன்பு செனகல் இரண்டு முறை இறுதிப் போட்டியில் தோற்று இருந்தது. 2002-ம் ஆண்டு கேமரூனிடனும், 2019-ல் அல்ஜீரியாவிடமும் தோற்று இருந்தது. தற்போது வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது