கடந்த சில நாட்களாக மாலிங்கா தனது யூடியூம் மூலம் இளம் வீரர்களுக்காக தனது அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிவருகின்றார். இதன் மூலம் அவருக்கான அங்கீகாரம் மேலும் வழுவடைந்துள்ளது.
நேற்று தனது காணொளி பதிவில் மாலிங்கா வீரர்களின் உடல் பயிற்சி மற்றும் ஆரோக்கிய நிலை பற்றி பேசி இருந்தார். அப்போது இலங்கை கிரிகட் சம்மேளனத்தின் புதிய 2 கி.மீ ஓட்ட சோதனை பற்றி அவர், "அனைத்து பயிற்சியும் கொரோனா தொற்றுநோயுடன் நின்றுவிட்டது.
உடற்தகுதியைப் பராமரிக்க வீட்டிலேயே தங்கியிருக்கும் போது விளையாட்டு வீரர்களால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே பயிற்சிகளில் ஈடுபட முடிந்தது. அத்தகைய சூழ்நிலையில் விளையாட்டு வீரர்களுக்கு 2 கி.மீ சோதனை எந்த முன் தயாரிப்பும் இல்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தகைய உடற்பயிற்சி சோதனை செய்வதில் தவறில்லை. ஆனால் இதுபோன்ற சோதனைகளுக்குப் பழகுவதற்கு எங்கள் வீரர்களுக்கு சிறிது நேரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அந்த காலகட்டத்தின் முடிவில் சோதனைகளில் தோல்வியடைந்தால் வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டிருந்தால் அது இன்னும் வெற்றிகரமாக இருந்திருக்கும்." என தெரிவித்திருந்தார். இலங்கை கிரிகட் சம்மேளனத்தின் இந்த சோதனை குறித்து சிலர் சார்பாகவும் சிலர் விமர்சித்தும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள்.
மேலும் சில முக்கிய வீரர்கள் இதில் தேர்ச்சி பெற தவறிய நிலையில் அவர்களுக்கான இரண்டாம் வாய்ப்புகளும் முன்னைய குழாம் தெரிவுகளில் வழங்கப்பட்டன. வரும் டி20 உலகக்கோப்பை போட்டிகளுக்கான தெரிவுக்கு தகுதி பெற அனைத்து வீரர்களும் மேற்படி சோதனையை சரியாக குறித்த நேரத்தில் ஓடி முடித்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து இன்னும் ஓய்வு பெறாத லசித் மாலிங்கா மீண்டும் இலங்கை சீருடை அணிந்து களமிறங்குவாரா என்ற கேள்வியும் ரசிர்கள் மத்தியில் வெகுவாக காணப்படுகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்.