ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி 2020 கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டென்மார்க்-பின்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் இடைநடுவே டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்தில் மூர்ச்சையாகி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
24 நாடுகள் பங்கேற்கும் ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி 2020 ஆரம்பமாகியுள்ளன. இந்த நாடுகளின் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. டென்மார் அணியுடன் பின்லாந்து அணி மோதும் போட்டி கோபன்ஹேகனில் நேற்று நடைபெற்றது. இதன்போது டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்தில் திடீரென நிலைகுலைந்து விழுந்து மூர்ச்சையானார். எவ்வித அசைவும் இன்றி அவர் கிடந்தமையால் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது. மைதானத்திலே அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தபோதும் நினைவு திரும்பாதமையால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மற்றுக் சக வீரர்கள் எரிக்சனின் பெயரைச்சொல்லி குரல் எழுப்பி உடல்நலம் சீரடைய வேண்டிப்பிராத்தித்தனர்.எனினும் நிறுத்தப்பட்ட போட்டி ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் கழித்து மீண்டும் தொடங்கியது, இதில் பின்லாந்து 1-0 என்ற வெற்றியைப் பெற்றது.