free website hit counter

ஆசிய கோப்பை : சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி சிறப்பான வெற்றி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்த நிலையில் சூப்பர்4 சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது. இந்த முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர் ஹசரத்துல்லா ஷஷாய் 13 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் 45 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இப்ராகிம் சட்ரன் 40 ரன்னில் அவுட்டானார். நஜிபுல்லா சட்ரன் 17 ரன்னிலும், கேப்டன் முகமது நபி ஒரு ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். நிசங்கா 35 ரன்னிலும், குசல் மெண்டிஸ் 36 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

அடுத்துவந்த அசலங்கா 8 ரன்னில் வெளியேறினார். சனங்கா 10 ரன்னில் வெளியேறினார். ஆப்கானிஸ்தானுக்கு வெற்றிவாய்ப்பு ஏற்பட்டபோது களமிங்கிய குனதிலகா மற்றும் பனுகா ராஜபக்சா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

குனதிலகா 20 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 33 ரன்கள் குவித்தார். அதேபோல், 14 பந்துகளை சந்தித்த பனுகா ராஜபக்சா 1 சிக்சர், 4 பவுண்டரிகள் உள்பட 31 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இறுதியில் இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை 179 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றிபெற்றது. கசரங்கா 9 பந்துகளில் 16 ரன்களுடனும், கருனரத்னே 2 பந்துகளில் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆட்டநாயகனாக ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மதுல்லா குர்பாஸ் தெரிவானார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: