அடுப்பங்கரையில் தீபாவளிக்கு என்ன பலகாரங்கள் செய்யலாம் என இன்னும்!? யோசனை செய்துக்கொண்டிருப்பவர்களே இதோ இரு உடனடி பலகாரவகைகள்.
ஒரே டெம்லேட் ஆனால் ரேசிபி வேறாக மாற்றிபோட்டுக்கொள்ளலாம்.
உங்கள் வீட்டில் பகோடா செய்வது எப்படி என தெரிந்திருந்தால் கடலைப்பருப்புக்கு பதிலாக நிலக்கடலை, பாதாம் பருப்பு அல்லது வேறு நட்ஸ் வகைகள் இருந்தால் அதை மிக்ஸ்சியில் ஒரு சுற்றில் அரைத்த மாவாக எடுத்துக்கொள்ளுங்கள். அதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம்(தேவை எனில்), சீரகம், பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்தூள் அத்தோடு கோதுமை மாவும் கலந்து பகோடோ மா பிசைவதுபோல் தண்ணீர் விட்டு பிசைந்துகொள்ளுங்கள்; பிறகு என்ன எண்ணெய்யில் இட்டு பொறித்து எடுத்தால் வேற லேவல் பகோடா தயார்.
இதே அரைத்த நட்ஸ் வகையில் இனிப்பு பலகாரம் தயாரிப்பதற்கு; நட்ஸ் வகைகளை அரைக்கும் போது சிறிது சக்கரையும் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் போலி சுடுவதுபோல் மாவில் உள்ளுடனாகவும் இந்த கலவையை வைத்து வேகவைத்து எடுக்கலாம். அல்லது சுசியம் பலகாரமாக சுட்டு எடுக்கலாம். இதையும் தாண்டி வாணலியில் சக்கரை கரைசலில் நட்ஸ் மாவை கொட்டி கிளரி நட்ஸ் அல்வா செய்தும் அசத்தலாம்.