free website hit counter

விநாயகருக்கு ஏன் சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு ?

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆலயங்களில் சுவாமி புறப்படுப்பவதற்கு முன்னதாகவும், இரதோற்சவங்களின் போது தேர் புறப்படுப்படுவதற்கு முன்னதாகவும், வழிப்பயணங்களின் போதும், அவற்றினை ஆரம்பிக்கும் போதும், விநாயகப் பெருமானை நினைந்து, தேங்காயைச் சிதற உடைக்கும் பழக்கம் எங்கிருந்து ஆரம்பமாகியது ? 

காசிப முனிவரின் தர்மபத்தினி அதிதி. விநாயகரைபோற்றித் தவம் செய்தார். அவளின் தவத்தில் மனம் மகிழ்ந்த விநாயகப்பெருமான்  என்னவரம் வேண்மென்று கேட்க தேவர்களையும், பக்தர்களையும் அசுரர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டாள். அதற்கு அருள்புரியும் வண்ணம் விநாயகப் பெருமான்  குழந்தை வடிவெடுத்து அதிதியிடம்  மகோற்சகடர் என்ற பெயரோடு வளர்ந்து வந்தார். இதனை அறிந்த காசிராஜன் வந்து மகோற்சகடரை அரசசபைக்கு அழைத்துச் சென்றான். 

கூடன் என்ற அசுரனின் செவிக்கு இந்தச் செய்தி எட்டியது. அவன் விரைந்து சென்று  அரண்மனை வாசலில் பாறாங்கல்லாக மாறி, வழியை அடைத்துப்படுத்திருந்தான். மகோற்சகடர் காசிராஜன் மூலமாக ஆயிரம் தேங்காய்களை  பாறையாகி கிடந்த அரக்கர் மேல் உடைக்க செய்தார். அதன் காரணமாக ஏற்பட்ட வலி பொறுக்க முடியாது கூடன் எனும் அந்த அரக்கன் கதறி அழுது அழிந்து போனான். 

நற்காரியங்களில் நாம் ஈடுபடும் போது, நம் மனங்களுள்  கூடன் எனும் அசுரன் போல் எழுந்திருக்கும் எதிர்மறை எண்ணங்களை சிதறடித்து வழிபாடியற்றும் பொருட்டு, தேங்காய் உடைத்து வழிபடுவோரை பூரண அருள் புரிந்து, அவர்களது விக்னங்களைத் தீர்க்க வேண்டும் என்று விநாயகப்பெருமானிடம் தேவர்கள் கேட்டு கொண்டனர். விக்கினங்கள் தீர்ப்பதனால் அவர் விக்னவிநாயகர் ஆகி நின்று அருள்பாலிக்கின்றார் என்பது ஐதீகமும் நம்பிக்கையும். 

மகோன்னதங்கள் மிகுந்த  விக்னவிநாயகப் பெருமானை ஓவ்வொருவரும் வழிபட்டுப் பெருவாழ்வு வாழ்வோமாக.

“திருவாக்கும் செய் கருமங் கைகூட்டுச் செஞ்சொற்

பெருவாக்கும் பீடும் பெருக்கும். உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆணழகத்தானைக்

காதலால் கூப்புவார் தம் கை. "

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction