free website hit counter

கார்த்திகைப் பெண்களின் கார்த்திகேயன் !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சூரனின் கொடுமை  தாங்காது இந்திரன் பல காலம் தவம் செய்கின்றான். கருணையே வடிவமாகிய சிவபெருமான் கருணைக்கொண்டு காட்சி அளித்து,நமக்கு ஒரு சேய் பிறப்பான், அவன் சூரனை தொலைப்பான் என்று வரம் அளிக்கின்றார்.

அந்த வரத்தின்படி பரம்பொருளாகிய சிவபெருமானிடம்  பிரம்மாதி  தேவர்கள் ஓர் வரம் வேண்டுகின்றனர். பரமனே சூரன் பல பெரிய வரம் பெற்றவன். மூவுலகமும் அவனிடம் அஞ்சி உள்ளன. எனவே சூரனை வென்றிட  உம்மைப்போலவே, உமக்கு ஒப்பான ஓர் மைந்தன் வேண்டும் என வேண்டுகின்றனர். இதனை கந்தபுராணம் 

"ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்,
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பமும் இன்றி,
வேதமும் கடந்து நின்ற விமல ஓர் குமரன் தன்னை,
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார் " எனும் பாடலில் உணர்த்துகின்றது.

பெருமானே, தோற்றும் ,இடை, முடிவு  இல்லாதவரும்., அருவம் உருவம் ,சமநிலை, காரணம் போன்ற தன்மை இல்லாதவரும் , பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம் போன்ற வினைகளுக்கு ஆட்படாதவரும்  வேதங்களையும் கடந்து நிற்க்கும் சொரூபமாகவும் நிற்க்கும் பரமனே ,
உம்மைப்போன்றே, உமக்கு ஒப்பான ஓர் குமரனை தந்தருளவேண்டும் என தேவர்கள் வேண்டினர். அதன்படி சிவாம்சமாகவே சிவசொரூபமாகவே  கருணைக்கொண்ட  ஆறுதிருமுகங்களும், பன்னிரு திருகரங்களும் கொணடு இந்த உலகம் உய்ய ஸ்ரீ முருகப்பெருமான் அவதரித்தார் .

"அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்,
பிரமமாய் நின்ற ஜோதி பிழம்பது ஓர் மேனி யாகக்,
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே,
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய. " எனக் கச்சியப்ப சிவாச்சாரியார் பாடுகின்றார்

சிவபெருமான் சூரனை அழிக்க தனது தீக்கண்களை வெளியிட்டார். அந்த கண்களிலிருந்து வெளிவந்த ஒளிக்கதிர்கள் கங்கையின் மார்பில் விழுந்து, பின்னர் சரவணப் பொய்கையில் தோன்றின. 

சரவணப்பொய்கையில் தோன்றிய குழந்தைகளை, நிதார்த்தினி, அப்ரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா, எனும் ஆறு கார்த்திகைப் பெண்கள் பாசத்துடன் வளர்த்தனர்.இப்பெண்களின் பெயர்கள் சில இடங்களில்  அம்பிலி (அம்ரிதா), துளசி (நித்ரா), நந்தா, மஹாலயா, வரதா, மாஹேஸ்வரி, எனும் மாற்றங்களுடனும் உண்டு. 

பார்வதி தேவியார் அக்குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்து, அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து தன் மார்பில் தாங்கி, “இவன் என் குமாரன் , கார்த்திகேயன்” என அறிவித்தாள். இதனால் முருகன் “கார்த்திகேயன்” (கார்த்திகைப் பெண்கள் வளர்த்தவர்) எனப் பெயரடைந்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula