உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் மறுத்தால், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சாத்தியமான கூடுதல் தடைகள் குறித்த விவரங்களை டிரம்ப் தெரிவிக்கவில்லை. பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்காக அமெரிக்கா ஏற்கனவே ரஷ்யாவிற்கு பெரிதும் தடை விதித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பும் விவகாரத்தையும் தனது நிர்வாகம் கவனித்து வருவதாகக் கூறிய டிரம்ப், உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியம் மேலும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று தனது கருத்தைச் சொன்னார்.
"நாங்கள் (உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமைர்) ஜெலென்ஸ்கியுடன் பேசுகிறோம், நாங்கள் விரைவில் ஜனாதிபதி புட்டினுடன் பேசப் போகிறோம்" என்று டிரம்ப் கூறினார்.
உக்ரைன் போரை நிறுத்த தலையிடுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்ததாக டிரம்ப் கூறினார்.
"அவர் அதைப் பற்றி அதிகம் செய்யவில்லை. நமக்கு நிறைய அதிகாரம் இருப்பது போல, அவருக்கு நிறைய... அதிகாரம் இருக்கிறது. நான் சொன்னேன், ‘நீங்கள் அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.’ நாங்கள் அதைப் பற்றி விவாதித்தோம்.
ஆதாரம்: ராய்ட்டர்ஸ்