ஏற்கனவே 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட மியான்மாரின் முன்னால் அரச தலைவி ஆங் சான் சூகி மீதான புதிய விசாரணை அடிப்படையிலான தீர்ப்பு ஜனவரி 10 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
மியான்மார் இராணுவத்தால் வலுக்கட்டயாமாகப் பதவி நீக்கம் செய்யப் பட்ட இவர் மீது அனுமதியில்லாத வாக்கி டோக்கிகளை உபயோகித்தது, ஊழல் மோசடி மற்றும் கோவிட் கட்டுப்பாடுகளை அவரே மீறியது, தேர்தலில் மோசடி போன்ற பல குற்றச்சாட்டுக்களை இராணுவம் சுமத்தியிருந்தது.
இதன் அடிப்படையில் இவருக்கு 100 வருடத்துக்கும் அதிகமான சிறைத் தண்டனை கூட விதிக்கப் படலாம் என எதிர்பார்க்கப் பட்டது. தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்திருந்தார், அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருந்த 76 வயதாகும் ஆங் சான் சூகி. இவர் ஆட்சியில் இருந்து அகற்றப் பட்டு மியான்மாரில் இராணுவ ஆட்சி ஏற்பட்ட பின்னர், இராணுவத்துக்கு எதிராக அங்கு ஏற்பட்ட மக்கள் போராட்டம் இராணுவ அரசினால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப் பட்டது.
இதன் போது 500 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டது குறிப்பிடத்தக்கது.