இந்தியா , இங்கிலாந்து உட்பட 5 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத்தடையை ஜெர்மனி நீக்கியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து உட்பட கோவிட் -19 இன் 'டெல்டா' மாறுபட்ட பரவல் காரணமாக ஜெர்மனி அந்நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு தடை விதித்திருந்தது.
இந்நிலையில் தாக்கம் குறைந்துவருவதால் தற்போது "அதிக அபாயமுள்ள நாடுகளின் பட்டியலில்' இருந்து இந்தியா, நேபாளம், ரஷ்யா, போர்ச்சுகல் மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றை ஜெர்மனி நீக்கியுள்ளதுடன் பயணத்தடையையும் தளர்த்தியுள்ளது.
ஜூலை 7ஆம் திகதி முதல் குறிப்பிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான பயணிகள் மீதான தடையை ஜெர்மனி நீக்குவதாக ஜெர்மன் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் தெரிவித்துள்ளார்.
இரண்டு தடுப்பூசி அளவையும் பெற்றவர்கள், அல்லது அவர்கள் கோவிட் தொற்றிலிருந்து மீண்டு வந்ததை நிரூபிக்கக்கூடியவர்கள், திரும்பும்போது தனிமைப்படுத்தல் சட்டம் அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.