மனிதகுலத்திற்கான வரலாற்று மைல்கல்லில் உலக மக்கள்தொகை நேற்று 8 பில்லியனை எட்டி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிவித்துள்ளது.
2022 நவம்பர் 15 அன்று, உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டிருந்ததுடன், இது மனித வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாகவும் பார்க்கப்பட்டது. அதேபோல் நேற்று உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டிக் கடந்துகொண்டிருப்பதை ஐக்கிய நாடுகள் சபை 8 பில்லியன் தினமாக தெரிவித்தது.
இதன் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், "இந்த மைல்கல், உலக மனிதகுலத்தின் பகிரப்பட்ட பொறுப்பைக் கருத்தில் கொண்டு பன்முகத்தன்மை மற்றும் முன்னேற்றங்களைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும்" என தெரிவித்துள்ளார்.
இந்த முன்னோடியில்லாத வளர்ச்சி பொது சுகாதாரம், ஊட்டச்சத்து, தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் முன்னேற்றம் காரணமாக மனித ஆயுட்காலம் படிப்படியாக அதிகரிப்பதன் காரணமாகும். இது சில நாடுகளில் அதிக மற்றும் நிலையான கருவுறுதல் நிலைகளின் விளைவாகும்.
உலக மக்கள்தொகை 7 முதல் 8 பில்லியனாக வளர 12 வருடங்கள் எடுத்தாலும், அது 9 பில்லியனை எட்டுவதற்கு தோராயமாக 15 ஆண்டுகள் ஆகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 2037 வரை - இது உலக மக்கள்தொகையின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதற்கான அறிகுறியாகும்.
உலக 8 பில்லியன் மக்கள்தொகை தினமான நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை 2022 இன் படி; 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா விஞ்சும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே COVID-19 தொற்றுநோய் மக்கள்தொகை மாற்றத்தின் மூன்று கூறுகளையும் பாதித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய ஆயுட்காலம் 71.0 ஆகக் குறைந்துள்ளது. சில நாடுகளில், தொற்றுநோய்களின் தொடர்ச்சியான அலைகள் கர்ப்பம் மற்றும் பிறப்பு எண்ணிக்கையில் குறுகிய காலக் குறைப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம்.
உலக மக்கள் தொகை குறித்த பிரத்தியேக இணைத்தளத்தில் மேலும் அறிந்துகொள்ளலாம் https://www.unfpa.org/8billion