காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ளும் சட்டவிரோதமான தாக்குதல்கள் காசாவின் சுகாதார அமைப்பை தொடர்ந்து அழித்து வருகின்றது.
இத் தாக்குதல் போர்க்குற்றங்களாக விசாரிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பு (HRW) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோயாளிகள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு இறப்பு அச்சத்தினை ஏற்படுத்தும், இஸ்ரேலிய அரசாங்கத்தின் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்கள் மீதான சுதந்திர சர்வதேச விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும் என அக்குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் கீழ் ஹமாஸ் கட்டளை மையம் உள்ளதாக, அமெரிக்க உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அல்-ஷிஃபா மருத்துவமனை தாக்குதலில் இறந்த 179 பேர்களது உடல்கள் பொதுவில் ஏற்படுத்தப்பட்ட "வெகுஜன புதைகுழியில்" புதைக்கப்பட்டதாக காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கூறினார்.