free website hit counter

காசாவில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது - WHO

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காசாவில் சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,எச்சரித்துள்ளார்.

காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் பாதி இனி செயல்படாது. மருத்துவமனை தாழ்வாரங்கள் காயமடைந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் இறக்கும் நபர்களால் நிரம்பி வழிகிறது. மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைகின்றனர். இதனைக் குறிப்பிட்ட WHO இன் இயக்குனர் போர்நிறுத்தத்திற்கான அவசியத்தை வேண்டுகோளாக விடுத்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், இஸ்ரேலிய தூதர் கிலாட் எர்டான், ஐக்கிய நாடுகள் சபையை ஹமாஸின் மற்றொரு கூட்டாளி என்று குற்றம் சாட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இவ்வாறிருக்க; பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேற்று இரவு பிபிசிக்கு அளித்த பேட்டியில், யூத அரசு தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை வலியுறுத்தியபடியே, இஸ்ரேலை போரை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula