EPF மீதான வட்டி வீதம்13% ஆக அதிகரிக்கப்படும்: சியம்பலாபிட்டிய
வாகன இறக்குமதி தடையை தளர்த்தல்: புதிய அறிவித்தல்
400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் LPL ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்
தமிழரசு இனி எப்போது மீண்டெழும்?!
இலங்கைத் தமிழரசுக் கட்சியை மறுசீரமைப்புச் செய்யப் புறப்பட்டவர்கள் இன்றைக்கு நீதிமன்றங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலின் முதன்மைக் கட்சியொன்று தன்னுடைய பொறுப்பை மறந்து, தனியார்த்தனமும் சுயநல ஆட்டமும் ஆட முயன்றதன் விளைவை இப்போது சந்தித்து நிற்கின்றது.
தேசிய விடுதலையை வேண்டி நிற்கும் சனக்கூட்டத்தின் அரசியலை முன்னெடுக்கும் தரப்பினர், தங்களுக்குள் பதவிகளுக்காக முட்டி மோதும் போது, அந்தச் சனக்கூட்டத்தின் விடுதலை இலக்குகள் சிதைக்கப்படுகின்றன. அப்படியானதொரு நிலையை, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தாய்க்கட்சி என்று சொல்லக்கூடிய தமிழரசுக் கட்சி இப்போது நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. அந்தக் கட்சியிடம் எதிர்கால அரசியல் திட்டங்கள் ஏதும் இல்லை. வாக்கு அரசியலின் கட்சியாக தன்னைச் சுருக்கிக் கொள்ளும் செயற்பாடுகள் மட்டுமே காணப்படுகின்றன.