free website hit counter

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை  விரிவுரையாளர் ஒருவரின் பெயரை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்மட்ட உரையாடல்களில் முன்மொழிந்திருக்கிறார். குறிப்பாக, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரிடம், விரிவுரையாளரின் பெயரை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'அதிக எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என்றும், மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் அந்த மதிப்புகள் 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வலிமைமிக்க வேட்பாளரை நியமிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தலவாக்கலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதிலும், தான் சமகி ஜன பலவேகய கட்சியில் இணைந்து கொண்டதாக வெளியான தகவலை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க மறுத்துள்ளார்.

இலங்கையின் முதன்மை எரிவாயு விநியோகஸ்தர் லிட்ரோ கேஸ் லங்கா தனது உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டர்களின் விலையை இன்று (மே 03) நள்ளிரவு முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு (GOR) 2024 மார்ச் இறுதிக்குள் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …