கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்துக்கு 50,000 தடுப்பூசிகளை அரசாங்கம் வழங்கவுள்ளது.
ஜூன் 07 வரை பயணக்கட்டுப்பாடு தளர்வுகள் இன்றி தொடரும்; இராணுவத் தளபதி அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் மாதம் 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மே 31 பயணக் கட்டுப்பாடு தளர்வு; இன்னமும் தீர்மானமில்லை!
கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்து பயணக் கட்டுப்பாடுகளை மே 31ஆம் திகதி தளர்த்துவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமில மழை பெய்வதற்கான சாத்தியம்!
கொழும்பு துறைமுகத்திற்கு அண்மைய கடலில் தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து வெளியேறும் புகையால் நாட்டில் அமில மழை பெய்வதற்கான சாத்தியமுள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை: பாதுகாப்புச் செயலாளர்
இலங்கை எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
கோட்டா சிறுவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்: அநுர குமார
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் பிரஜைகளுடனும், பொருளாதாரத்துடனும், சிறுவர்களின் எதிர்காலத்துடனும் விளையாடுகின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்னம் பதவிப் பிரமாணம்!
புதிய சட்டமா அதிபராக சஞ்சய் இராஜரத்னம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.