free website hit counter

வாகன இறக்குமதிக்கு தடை: அரசு விளக்கம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜனவரி 08) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"தற்போதைய சூழ்நிலையில், வரி வருவாய் அதிகரிக்கும் என்றும், வாகனங்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படும் என்றும் எங்களால் உறுதியளிக்க முடியாது," என்று அவர் கூறினார்.

அதிக அந்நியச் செலாவணியைப் பெறுதல், அந்நியச் செலாவணி அதிகரிப்பு மற்றும் பொருளாதாரத்தின் நீண்டகால ஸ்திரத்தன்மை ஆகிய அனைத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் விரைவான தீர்மானங்களை எடுக்க முடியாது என சுட்டிக்காட்டிய அவர், இதுவரை எடுக்கப்பட்ட பல்வேறு கடினமான தீர்மானங்களினால் இலங்கை தற்போது பலனடைவதாகவும் தெரிவித்தார்.

வாகன இறக்குமதித் தடை தற்போது தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களுக்கு மாத்திரமே அமுலில் உள்ளதாகவும் ஏனைய துறைகளுக்கு இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் நினைவூட்டினார்.

வாகனங்கள் மீதான இறக்குமதித் தடையை நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அண்மைய ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு மத்தியில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன. ஆனால், இந்த தகவலை நிதி அமைச்சகம் மறுத்துள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: